
பாலன் கதை!
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்து. படகு சேதமடைந்தது, கடலில் குதித்து நீந்திக்கரை சேர்ந்தான். கரைசேருமிடத்தில் காத்திருந்த எதிரிகள் அவனைக் கைது செய்தார்கள். எதிரிகளிடம் சிக்கிக் கொண்டான். உயிருடன் பிடிபடக்கூடாதென்ற உறுதியோடு சயனைட் உட்கொண்டான். கடித்த சயனைட் குப்பி உப்புத் தண்ணீரின் தாக்கத்தின் விளைவாக வேலை செய்யவில்லை. படையினரிடம் உயிருடன் பிடிபட்ட சூழலில் தனக்குத் தெரிந்த இயக்க இரகசியங்களைத் தன்னிலை மறந்த சூழலிலும் வெளியிடக் கூடாதுன்பதற்காகத் தனது நாக்கினைத் தானே தனது பற்களால் கடித்துத் துப்பினான்.
படையினர் இராணுவ மருத்துவமனையில் கட்டிலோடு விலங்கிட்டு வைத்திருந்தனர். மருத்துவமனையில் தனது தலையைக் கட்டிலோடும் சுவரோடும் மோதித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்.
– துளசிச்செல்வன்
▪️இந்த மாதிரி அதிமானுடத் தியாகமே புலிகளைத் தமிழர்கள் மத்தியில் கதாநாயர்களாக வரித்துள்ளது. இந்த வரலாறுகள் கடத்தப்படும். இந்த வரலாறுகள் அடுத்த தலைமுறையை விடுதலை நோக்கி நகர்த்தும். ஐயமில்லை.