×

ஈழக் கல்வெட்டுக்கள் கூறுவது ஆசீவகமே

ஈழக் கல்வெட்டுக்கள் கூறுவது ஆசீவகமே

ஈழத்தீவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து காணப்படுகின்ற கல்வெட்டுச் சான்றுகள் அன்றைய காலத்தில் இருந்த துறவு முறைக்கு சான்றாக காணப்படுகிறது. அவ்வாறு துறவு ஏற்றவர்கள் இல்லற வாழ்வின் போதும் துறவினை மேற்கொண்டு உள்ளார்கள்.இவ்வாறு துறவினை மேற்கொண்டவர்கள் அரசர், அமைச்சர், படைத் தலைவர் முதல் பாணர் வரையும் காணப்படுகிறார்கள்.அவற்றில் இல்லற வாழ்வை பூர்த்தி செய்த பெண்களும் அடங்குவர். இவ்வாறாக அனைத்து தரப்பினரும் குறிப்பாக இல்லற வாழ்வை பூரணப்படுத்திய அனைவரும் துறவு ஏற்கக்கூடிய ஒரே நெறியாக விளங்கியது சங்ககால பகுதியில் பழந்தமிழக நெறியாகிய விளங்கிய ஆசீவகம் மாத்திரமே,இவர்கள் இந்த துறவு வாழ்க்கையை தமது வாழ்வின் மிக முக்கியமான ஓர் கடமையாகவே வாழ்வின் இடைப்பகுதியில் ஏற்று பின்பற்றி இருந்துள்ளனர் என்பது இக் கல்வெட்டுகளில் இருந்து உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறான இல்லற வாழ்வில் அல்லது இல்லற வாழ்வை பூரணப்படுத்திய எவரும் துறவு ஏற்பதை அக்கால ஏனைய மதங்கள் ஏற்பதில்லை,அவை இளமையிலேயே துறவு பூணுவதை வலியுறுத்துபவை.அது மாத்திரமல்ல இவ்வாறான இசை சார்ந்த பாணர்களும் துறவு பூணுவதை ஏற்பதில்லை. இவ்வாறான துறவிகள் தமது இல்லற வாழ்விற்கு பின் துறவு ஏற்கலாம் என உருவானதே ஆசீவகம், ஏனையவை அவ்வாறானதல்ல. இவ்வாறு துறவு ஏற்றவர்கள் கொல்லாமை,புலால் உண்ணாமை,மது அருந்தாமை போன்ற நோன்புகளை கடைப்பிடித்தவர்கள். இவ்வாறான செயல்களுக்கு எதிராக தோற்றம் பெற்றவர்கள்,இந்த செயல்களை புரிந்த வேத மதத்திற்கு எதிராக தோற்றம் பெற்றவர்கள்.

ஆக இந்த சைவ உணவு இவர்களுடைய காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது. அதற்கான காரணமாக அமைந்ததும் இவர்களுடைய ஓக வாழ்கையில் பூரணத்துவம் அதாவது நல்வெண்மை நிலையை எய்த வேண்டுமாயின் அதற்குரிய மூலாதாரமாக்க சக்கரங்களை தூண்டுவதாக இத்தகைய உணவுகள் ஒருபோதும் உதவாது.இவை புலனடக்கம் கெடுத்து உலக வாழ்வின் இன்பங்கள் குறித்த நாட்டத்தை தூண்டக்கூடிய சுரப்பிகளை செயலாற்ற வைப்பவை. அதனால்தான் இவ்வாறான புலால் உண்டு முத்தி பெறலாம் என்ற பொய்யான வேதமத கோட்பாடுகளை எதிர்த்தன. இவ்வாறான துறவிகள் தமது கோட்பாடுகளை பரப்புவதற்காக தேசம் தேசமாக நகர்ந்து கொண்டே இருந்தனர்.அவர்களில் பலர் வானியல் சார்ந்த கணியர்களாகவும்,சங்ககால புலவர்களாகவும்,அரசர்களுடைய குடும்பங்களாகவும்,பாணர்களாகவும் விளங்கினர்,அவர்களுடைய மதத்தில் இசை பிரதான பங்கை வகித்திருந்தது. அதன் விளைவாக அதன் அம்சமாக தமிழர் வாழ்விலும் இந்த இசை பிரதான பங்கை வகிக்கின்றன. அது சுபநிகழ்ச்சி,அடங்கலாக நிகழ்வுகள் எங்கும் காணப்படுகின்றது.

இதனை புரிந்து கொள்ளாதவர் ஆனை பார்த்த குருடரை போன்று பல்வேறு கதையளப்பர். அவ்வாறனவர்களுக்கு இது பத்தோடு பதினொன்றாக ஒரு புதினக் கட்டுரை ,ஆனால் எமக்கு எமது சொந்த வரலாறு.

 

guest
0 Comments