×

யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகளில்

யாழ்ப்பாணத்து நாட்டிய மரபுகளில்

யாழ்ப்பாண கோயில்களில் சதிராட்டம் என்ற பெயரில் நடனமாடும் நடன பெண்மணிகள் பிற் காலத்தில் சின்னமேளம் என்று அழைக்கப்பட்டனர்  70களின் முற்பகுதியிலையே இதற்க்கான வரவேற்பு குறைய தொடங்கி விட்டது  யாழ் நடன பெண்மணிகள் பற்றி ஒரு புராணமே எழுத பட்டிருக்காம் அதுக்கு பெயர் கனகி புராணம் இது 18 நூற்றாண்டில் எழுதப்பட்ட அங்கத இலக்கியமாம் இந்த சின்னமேள இலக்கியத்தை பற்றி வந்த கட்டுரையின் ஒரு பகுதியைகீழே பார்க்கலாம்

கைதடியிலே திருவிழா, வேரைக்கையிலே திருவிழா, சுதுமலையிலே திருவிழா, மூத்தநயினார் கோயிலிலே திருவிழா,  மாவிட்டபுரத்திலே திருவிழா, புன்னாலையிலே திருவிழா, துன்னாலையிலே திருவிழா, மருதடியிலே திருவிழா என்று சொல்லிக்கொண்டு கூட்டங்கூட்டிக் கஞ்சா லேகியம் உட்கொண்டு தாசிகளுடைய வண்டிகளுக்குப்பின்னாலேயும் ஓடிக்கொண்டு, சேணிய தெருவிலே இரணிய நாடகம், கள்ளியங்காட்டிலே அரிச்சந்திர விலாசம் கந்தர் மடத்தடியிலே தமயந்தி விலாசம், நெல்லியடியிலே ஏதோ ஒரு கூத்து,

பறங்கித்தெருவிலே ஏரோது நாடகம், சங்குவேலியிலே இராமநாடகம்,  மானிப்பாயிலே தருமபுத்திர நாடகம் என்று கேட்ட கேட்டவுடனேயே  கஞ்சா லேகியந்தின்று வீராவேசத்தோடு ஈட்டி,  வளைதடி, கருங்காலித் தண்டு கைப்பற்றி நடந்து நித்திரை விழித்து, உலைந்துகொண்டும் நாடோடிகளாய்த் திரிந்து கெடுவதும் திருவிழாக்காலங்களால் விளைந்த பிரயோசனங்களன்றோ.. ‘என்கின்ற

/சின்னமேளக் குழுக்களை அமைக்கத் தொடங்கினர். இது ‘செற்’ என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. தமிழகக் கலைஞர் ஒருவரும் ஏனையோர் யாழ்ப்பாணக் கலைஞராகவும் சில ‘செற்றுக்கள்’ அமைக்கப்பட்டன. ‘இந்த செற்றுக்களுள் பிரபலமான சில
புத்தூர் மார்க்கண்டு செற்,  ஆவரங்கால் யூனியன் செல்லத்துரை செற். நீர்வேலி வைத்திலிங்கம் செற்.

கொக்குவில் சின்னத்துரை செற், இணுவில் சரவணமுத்து செற், விளான் பஞ்சலிங்கம் செற், கீரிமலை பொன்னுசாமி செற், அளவெட்டி ஐயாத்துரை செற், வண்ணார்பண்ணை இராமசாமி செற், வரணி சின்னத்தம்பி செற்,  யாழ்ப்பாணம் கந்தசாமி செற், முத்திரைச்சந்தி கந்தசாமி செற் ஒரு நீண்ட பட்டியல் என அமைக்கும் படியாக ஏராளமான செற்றுக்கள் தோன்றின. இப் பெயர் அந்த செற் இருக்கும் இடத்தையும் அந்த கலைஞரை போஷிப்பவரின் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டது.

சில இந்தக் குழுவிலே ஆடப்படும் பெண்களின் பெயராலும் அழைக்கப்படும். மல்லிகா செற்,

கரவிலாசினி செற்.
விஜயா செற்.
அம்பிகா செற்.
இராமலட்சுமி செற்
ஈஸ்வரி
சகோதரிகள் செற்.
லக்சுமி சகோதரிகள் செற்
எனப்பல இருந்தன.

இந்நிலை சமூகத்திலே இந்தக்கலைவடிவத்திற்கிருந்த வரவேற்பையும், அதேநேரம் செல்வந்தக்கலைவடிவமாக இது விளங்கியதையும் இத்தரவுகள் வாயிலாக அறிந்துகொள்ளமுடிகின்றது.

செற்- குழு செட் என்பது மருவி செற் என்று இலங்கைத தமிழர்களால் கூறப்பட்டது அதுக்கு – அதற்கு இப்படி பொருள் கொள்க!

 

guest
0 Comments