×

எண்பதுகளின் தசாப்தம்

எண்பதுகளின் தசாப்தம்

வரலாறு காணாத வன்முறைப் பூகம்பங்கள் இலங்கைத் தீவை உலுப்பிய காலகட்டமாக, எண்பதுகளின் தசாப்தம் அமைந்தது. இந்தக் காலகட்டத்தில் மூர்க்கம் கொண்டு எழுந்த அரச ஒடுக்குமுறைக்கு எதிராகச் சீற்றம்கொண்டு எழுந்த புலிகளின் எதிர்ப்பியக்கம், சூறாவளி வேகத்தில் உக்கிரமடைந்தது

இந்தத் தசாப்தத்தில் தமிழீழம் என்றுமில்லாதவாறு இரத்தம் சிந்தியது. சிங்களப் படையெடுப்புக்களும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும், உள் ஊர்க் கூலிப்படைகளின் அராஜகமுமாகத் தமிழீழ மண் ரண களமாகியது.

மிகக் கொந்தளிப்பான இந்தக் காலகட்டத்தில், புயலின் மையமாக நின்று எல்லா எதிர்ப்புக்களுக்கும் ஈடுகொடுத்து, தமிழரின் வீர விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் பிரபாகரன். ஆகவேதான் இந்தத் தசாப்தத்தின் மாமனிதனாக, வரலாற்றுக் கதாநாயகனாகப் பிரபாகரன் கருதப்பட வேண்டியவர்.

இராணுவ, அரசியல், ராஜதந்திரப் பரிமாணங்களில் பல திருப்புமுனைகளை எடுத்த இந்தப் பத்தாண்டு வரலாற்றில், புலிகள் இயக்கம் பல சிக்கலான சவால்களுக்கு முகம்கொடுத்தது. இதில் இந்தியத் தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது. 1983 நடுப்பகுதியில் ராஜதந்திரக் குறுக்கீடாக ஆரம்பித்து, 1987 ஒக்ரோபரில் நேரடி இராணுவ ஆக்கிரமிப்பாகப் பூதாகரமெடுத்து, 1990 மார்ச் வரை நீடித்த இந்திய வல்லாதிக்கத் தலையீட்டைத் தனித்து நின்று எதிர்த்து, ஈற்றில் வெற்றி கொண்டமை புலிகள் இயக்கத்தின் மகத்தான வரலாற்றுச் சாதனையாகும்.

ஒரு மாபெரும் வரலாற்றுச் சக்தியாக வளர்ந்து, இக்காலகட்டத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்புமுனைகளையும் புலிகள் இயக்கமே நிர்ணயித்தது. இதனை இக்கட்டுரையில் முழுமையாக மீளாய்வு செய்வது கடினம். எனினும் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments