
இயக்கத்தின் மாணவர் அமைப்பின் logo
அப்போதே தெரியும் என்றாலும் இப்போது யோசிக்கும் போது தலைவரின் சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
கணினிப் பயன்பாடோ – அதன் அறிமுகமோ பெருமளவில் தெற்காசியாவை எட்டாத எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்கத்தின் மாணவர் அமைப்பின் சின்னத்தை கணினி அறிமுகத்துடன் அதுவும் இணையப் (Internet) பயன்பாட்டை சுட்டிக்காட்டும் வண்ணம் வடிவமைத்த தூர நோக்கு ஆச்சர்யம் தருகிறது.
மாணவர் அமைப்புக்கள் என்றாலே உலகில் புத்தகம், எழுதுகோல் போன்றவற்றைக் குறியீடாக்கியே தமது சின்னத்தை வடிவமைத்து வந்த ஒரு சூழலில் உலகில் முதலில் கணினியையும்/ இணையத்தையும் மாணவர்களின் குறியீடாக்கிய முதல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்றுதான் நினைக்கிறோம்.

(உலகத்தில் எண்பதுகளின் ஆரம்பத்தில் புலிகளுக்கு முன்பு வேறு ஏதேனும் மாணவர் அமைப்புக்கள் கணினியைத் தமது சின்னமாக வடிவமைத்திருக்கிறார்களா என்று இணையத்தில் தேடிக் களைத்து விட்டோம். ஏதேனும் உங்களுக்குத் தெரிந்தால் சுட்டிக் காட்டலாம்.)
தலைவர் அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், படைத்துறை, பொருண்மியம் போன்றவற்றில் எதிரிகள் உட்பட எல்லோரையும் விட ஒரு படி முன்னே நோக்கிச் சிந்தித்தார் என்பதற்கு இந்த SOLT Logo வும் ஒரு உதாரணம்.
![]()