×

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்திய விடுதலைப்புலிகளின் படையணிகள்.

தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாகத் தாக்கி  விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக  இலங்கை இராணுவத்தின் காவலரண்களும் துரிதமாக அமைக்கப்பட்டன.

இத்தகவல்களை மணலாற்று களமுனை வேவுஅணிகள் தளபதிகளான அன்பு  மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகள் தேசியத் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச்சிதைப்பதற்காகவுமே  இத்திட்டமிட்ட  சிங்களக்குடியேற்றத்திட்டம் அமைக்கப்படுவதாகவும் இவைகளுக்குப்பாதுகாப்பு வழங்கும் காவலரண்களைத்  தாக்கி அழிக்க உத்தரவிட்டதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதலில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்று  கூறி தளபதிகளை வழியனுப்பி வைத்தார். தலைவர் அவர்கள்,வேவு அணிகள் கொடுத்ததரவுகளின் அடிப்படையில்  நல்லதொரு தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்.அதற்கமைவாக இருநூறுபேர்கொண்ட ஆண் பெண் போராளிகளைக் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதல் திட்டம் கமல் முகாமில்  சிறப்புத் தளபதி அன்பு அவர்களால் அத்துடன் களத்தை வழிநடத்துகிற தளபதி வீமன் அவர்களுக்கு சிறப்புத்தளபதி அன்பு அவர்கள் தெளிவான ஒருவிடயத்தைக் கூறினார்.தமிழர்தாயகப்பிரதேசத்தின் மணலாற்றின் முக்கியத்துவத்தை ஆழமாகவிளங்கப்படுத்தி  அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை எமது தலைவர் அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.எனவே எமது மக்களின்  தாயகப்பரப்பு துண்டாடப்படாமல்  இருக்க என்ன விலைகொடுத்தாலும் இக்காவலரண்களை அழிக்கவேண்டும். ஏனெனில் இக்காவலரண்களை அழிக்காமல் விட்டால், திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தைத் தடுக்கவும் முடியாது என்பதற்காகவே அவர் கடும்தொனியில் இவ்விடயத்தைக்கூறினார்.ஒவ்வொரு போராளியும் இவ்விடயத்திலிலுள்ள ஆழத்தைப் புரிந்து கொண்டு இக்காவலரண்களைஅழிக்கவேண்டுமென மனதில் உறுதிபூண்டார்கள்.

திட்டத்தின்படி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டத்திற்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அனைத்துக் காவலரண்களை ,அதாவது இருபத்தைந்திற்கு மேற்பட்டகாவலரண்கள். தாக்கியழிப்பதே திட்டமாகும். திட்டத்திற்கமைவாக 02.03.1992 அன்று இரவு வேவு அணிகள் பெருங்காடுகளுக்கூடாக தாக்குதல் அணிகளை  மிகவும் இரகசியமாக நகர்த்தி 03.03.1992 அன்று அதிகாலை சுமார் ஒருமணியளவில்  எதிரியின் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு அண்மையாகக் கூட்டிச்சென்று விட்டனர்.  தாக்குதல், அன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பமானது தாக்குதல் ஆரம்பித்த குறுகிய நேரத்தில் அனைத்துக் காவலரன்களும் விடுதலைப்புலிவீரர்களின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.கைப்பற்றப்பட்ட அனைத்துக் காவலரண்களையும் அழித்துவிட்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் புலிகள் தளம் திரும்பினர். இவ்வெற்றிகரத்தாக்குதலை  களத்தில் தளபதி வீமன் அவர்களும் உதவியாக லெப்.கேணல்.கஐந்திரன் அவர்களும் (வீரச்சாவு. 30.12.2006) வழிநடத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து முல்லை மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல். அன்பு அவர்கள் வீரச்சாவு. (12.11.1993) செவ்வனவே வழிநடத்தியிருந்தார்.

இத்தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை சேகரித்துத் தந்ததுடன்  தாக்குதல் அணிகளையும் களத்திற்க்குள் குறிப்பிட்டநேரத்திற்க்குள் நகர்த்தி சண்டையிலும் பங்காற்றி பின்னாளில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் .இளம்புலி அவர்களையும் நினைவுகூருகின்றோம்.

இவ்வெற்றிகரத்தாக்குதலில் களத்தை வழிநடாத்திய தளபதி மேஐர்.வீமன் அவர்கள் வீரச்சாவடைந்தார்.

எழுத்துருவாக்கம் – சு.குணா.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments