
தீச்சுவாலை முறியடிப்பு சமரும் ரஷ்யா உக்ரேனின் இனை முறியடித்த விதமும் – ஒற்றுமை
(2 வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை. 2001 ஏப்ரல் 24 தினத்தினை நினைவு கூறும் விதமாகவும், வரலாற்றினை கடத்தும் நோக்கத்திற்காகவும் இதனை மீள்பதிவு செய்திருக்கிறேன்.)
தீச்சுவாலை முறியடிப்பு சமர் தொடர்பாக போரியல் ஆய்வாளர் தராகி சிவராம் தனது கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்.
“மேற்படி முப்பரிமாண மரபுவழி படை நகர்த்தல் தந்திரோபாயத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய, ஒரு புதிய பரிமாணம் கொண்ட பதில் நடவடிக்கையை புலிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதாவது எதிரியை வரவிடுதல், அவர்கள் வரும் வழியைச் சரியாக குறிவைத்து, பின்புலத்திலிருந்து எறிகணை, பீரங்கி தாக்குதல்களை மேற்கொள்ளுதல், அதன் மூலம் அந்த பாதைகளை அண்டிய கண்ணிவெடி வயல்களுக்குள் அவர்களை சிதறவைத்தல். பின்னர் அக்கண்ணிவெடி வயல்களினூடான முன்னொழுங்கு செய்யப்பட்ட பாதைகள் வழியாக வழிமறிப்பு தாக்குதல்களை மேற்கொள்ளுதல் என்ற அடிப்படையில் அமைந்த புலிகளின் எதிர் தந்திரோபாயத்தை யாராவது இதற்கு முன்னர் கையாண்டிருக்கிறார்களா என நான் கடந்த ஒருவாரகாலமாக போரியல் வரலாற்று நூல்களை தட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் மறுமொழி கிடைக்கவில்லை.”
“வழிமறிப்பு தாக்குதல்களை மேற்கொள்ளுதல் என்ற அடிப்படையில் அமைந்த புலிகளின் எதிர் தந்திரோபாயத்தை யாராவது இதற்கு முன்னர் கையாண்டிருக்கிறார்களா என நான் கடந்த ஒருவாரகாலமாக போரியல் வரலாற்று நூல்களை தட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் மறுமொழி கிடைக்கவில்லை.”
தாக்குதல் நடத்தும் எதிரி படைகளை தடுத்து நிறுத்த தற்காப்பு நிலையிலிருக்கும் படைகள் பல வகையான defense line களை கட்டமைப்பார்கள். இது போரியல் வரலாற்றில் புதிதல்ல. பழமையானதுதான்.
புலிகள் பயன்படுத்திய இந்த தந்திரோபாயத்தை இதற்கு முன்னர் யாரும் கையாண்டிருக்கிறார்களா என போரியல் வரலாற்று நூல்களை தேடியும் கிடைக்கவில்லையென எதை தராகி சிவராம் குறிப்பிடுகிறார்?
சுமார் 15000 இலங்கை இராணுவத்தினர், இதுவரை நடத்திராத அளவிற்கான சூட்டு ஆதரவுடன் குறுகிய நிலப்பகுதியில் முன்னேறியபோதுதான் புலிகள் இந்த போர் உத்தியை பயன்படுத்தினார்கள்.
அதுவரை காலமும் நடந்த சமர்களிலேயே, அதிக அளவான சூட்டு ஆதரவு செறிவான சமர் தீச்சுவாலை சமர்தான்.
இந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரை முன்னின்று நடத்திய தளபதி தீபன் “படையினரால் 50000 ஆயிரத்திற்கும்மேற்பட்ட எறிகணைகள், பீரங்கி குண்டுகள் பல குழல் எறிகணைகள், விமானக்குண்டுகள் என்பன 60 மணிநேர தீச்சுவாலை மற்றும் முறியடிப்பு சமர் காலத்தில் வீசப்பட்டன” என குறிப்பிடுகிறார்.
அன்றைய காலகட்டத்தில் அந்த குறுகிய நிலப்பரப்பில் எத்தகைய நுட்பமான defense line களை புலிகள் அமைத்திருந்தார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளிவரவில்லை.
ஆனால் 2009 இல் போர் முடிந்தபிறகு இது தொடர்பான தகவல்கள் வெளியே வர ஆரம்பித்தன.
அதில் ஒன்றுதான் இலங்கை இராணுவத்தின் 53 Division பிரிகேடியராக இருந்த Kamal Gunaratne கூறிய தகவல்கள்.
KAMALIKA PIERIS என்பவர் எழுதிய ERASING THE EELAM VICTORY Part 14 E எனும் கட்டுரையில், அந்த குறுகிய நிலப்பரப்பிற்குள் புலிகள் எத்தகைய defense line களினை கட்டியமைத்திருந்தார்கள் என்பதை Kamal Gunaratne விளக்கியிருந்தார். இந்த கட்டுரை 2020 இல் வெளியானது.
அந்த கட்டுரையில் Kamal Gunaratne , ஈழப்போர் 4 இல் (2006-2009) முகமாலை, பளை, கிளாலி, நாகர்கோவில் பகுதிகளில் புலிகளுடன் ஏற்பட்ட சமர்களை பின்வருமாறு விவரிக்கிறார்.
“இந்த பகுதிகளில் சமர் நடக்கக்கூடிய பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பு எங்கும் புலிகள் மிக செறிவாக கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். அத்துடன் பெரிய பெரிய மண்மேடுகள், பதுங்கு அரண்களை அமைத்திருந்தனர். இரண்டு Forward Defense Line (FDL) இனை அமைத்திருந்தார்கள்.”
“இந்த FDL இனை கிளாலி, முகமாலை இலிருந்து நாகர்கோவில் வரை புலிகள் அமைத்திருந்தார்கள். முகமாலை பகுதியில் புலிகள் கண்டிவெடிகளை செறிவாக புதைத்து வைத்திருந்தனர். இந்த முகமாலை பகுதிகளில் மட்டும் இலங்கை இராணவத்தினரில் 500 இற்கும் மேற்பட்டோர் தங்கள் கால்களை இழந்தனர்”
“இந்த குறுகிய நிலப்பரப்பில் இலங்கை இராணுவத்தின் main battle tank களையும் காலாட் படைகளையும் maneuver செய்ய முடியவில்லை. புலிகளின் anti tank தாக்குதலில் பல tank களை இழந்தோம்.”
“புலிகளால் நினைத்த நேரத்தில் இராணுவத்தை தாக்க கூடியதாக இருந்தது. அவர்களின் தாக்குதல்கள் மிக துல்லியமாக இருந்தன. பல தடவைகள் இராணுவத்தை உள்ளே நுழையவிட்டு ‘பாக்ஸ்’ அடித்து தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். ஒருமுறை புலிகளின் தாக்குதலில் இலங்கை இராணும் 6 armored vehicles களையும் 4 T-55 tanks களையும் 2 BMPகளையும் இழந்தது. இதில் 130 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்”
“முகமாலையில் எப்போதுமே இலங்கை இராணுவத்திற்கு இழப்புகள் அதிகமாக ஏற்பட்டன. இந்த பகுதியில் இராணுவம் நடத்தும் ஆபரேசன்களில், வழமையாக கிட்டத்தட்ட 200 இராணுவத்தினர் கொல்லப்படுவதும் காயம்படுவதும் சகஜமாகிவிட்டது.”
முத்தாயப்பாக Kamal Gunaratne பின்வருமாறு கூறுகிறார்.
“ஈழப்போர் அனைத்தையும் ஒன்றாக எடுத்தால், Muhamalai battle (2008) தான் decisive battle ஆக இருந்தது.”
(இந்த கட்டுரை பகுதி படமாக இணைக்கப்பட்டுள்ளது)
•Kamal Gunaratne வினது கூற்றின்படி, புலிகள் கிளாலி, முகமாலை, நாகர்கோவில், பளை பகுதிகளில் எவ்வளவு sophisticated ஆன defense line களினை கட்டியிருந்தார்கள் என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
இதனூடாக தராகி சிவராம் குறிப்பிட்ட விடயமும் மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதை உணரலாம்.
•இனி 2024 இற்கு வருகிறேன்.
இதே போர் உத்தியை ரஷ்யா உக்ரேனின் counter-offensive இனை முறியடிக்க பயன்படுத்தியதை தற்செயலாக நான் கேட்க நேர்ந்தது.
2023 ஜூன் மாதம் உக்ரேன் படை ரஷ்யாவிற்கு எதிரான counter-offensive இனை தொடங்கியது.
இந்த counter-offensive மூலம் ரஷ்ய படைகளை தோற்கடித்து விடமுடியும் என மேற்குலகம் மலைபோல நம்பியிருந்தது.
2022 டிசம்பரிலிருந்து 2023 ஜூன் வரை இந்த counter-offensive இற்கான ஆயுத்தங்கள் செய்யப்பட்டன. பெருமளவு கனரக ஆயுதங்களை மேற்குலகம் அள்ளி வழங்கியது. பிரிட்டனின் Challenger 2, ஜெர்மனியின் leopard, அமெரிக்காவின் M1 Abrams போன்ற main battle tank (MBT) களை மேற்குலகம் வழங்கியது.
ஆனால் மறுபுறத்தே இந்த counter-offensive இனை எதிர்ப்பார்த்து, அதனை முறியடிக்க ரஷ்ய படை பல மாதங்களாக defense line களை கட்டமைத்துகொண்டிருந்தது.
இந்த defense line களின் நீளம் பல நூறு கிமீகள்.
• 1வது defense line ஆக anti tank ditch இனை அமைத்திருந்தார்கள். இது பிரதானமாக anti tank weapons களை பயன்படுத்தும்.
• 2வது defense line ஆக பிரமிட் வடிவில் இருக்கும் concrete block இனை கொண்டு தடுப்பினை உருவாக்கியிருந்தார்கள். இதற்கு Dragon’s teeth என பெயர்.
• 3வது defense line ஆக zigzag வடிவிலான trench. இதனை zigzag வடிவில் அமைத்ததன் காரணம் எதிரியின் ஷெல்கள் தாக்கும்போது அதனது வெடிப்பு சிதறல்கள் பக்கத்தில் இருக்கும் கோணல் வடிவினை தாக்காது. அத்துடன் எதிரிகள் இந்த zigzag trench ஐ கைப்பற்றினாலும் நேர் கோட்டில் சுட முடியாது. வளைவான கோணம் மறைந்திருந்து தாக்குதலை நடத்த உதவியாக இருக்கும்.
• 3வது defense line இற்கு அடுத்து பல கிமீ தொலைவில் ரஷ்ய படைகளின் ஆர்ட்டிலறிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
• இத்துடன் இந்த defense line களின் தொடக்கத்தில், அவைகளுக்கு இடையில் பல ஆயிரம் சதுர கிமீ நிலப்பரப்பில் மிக செறிவாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. (இதனை விளக்கும் படங்கள் கீழே)
இந்த முதல் மூன்று defense line களின் ஊடாக உக்ரேனிய படைகளின் main battle tank நகர்வதற்கு பல தடங்கல் இருக்கின்றன. இந்த தடைகளில் ஏற்படும் கால தாமதத்தின்போது, பின்னேயிருக்கும் ரஷ்யாவின் ஆர்ட்டிலறிகள் துல்லியமான தாக்குதல் நடத்தும்.
•ரஷ்யா கட்டமைத்த defense line இனை Elastic Defense என அழைக்கிறார்கள்.
ஏனெனில் ஒரு defense line இனை ரஷ்ய படை இழந்து பின்வாங்கினால் அடுத்த line இல் நின்றுகொண்டு சண்டை பிடிக்கும். அதையும் இழந்தால் அடுத்த line.
இவ்வாறு முன்னேறிவரும் உக்ரேனிய படைகளின் சகல தாக்குதல் சூட்டையும் ரஷ்ய படைகள் absorb செய்துவிடும். பின்னர் ரஷ்ய படை சரியான தருணத்தில் சகல வளங்களையும் ஒன்று குவித்து counter-attack மூலமாக இழந்த line களை கைப்பற்றுவார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு, இவ்வளவு sophisticated ஆன defense line ஐ ஒரு நாடு அமைத்திருப்பது இந்த போரில்தான் என போரியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Eastern Europe defense analyst ஆக இருக்கும் Andrew Rasiulis அந்த விடயத்தினை குறிப்பிடுகிறார்.
“தாக்குதல் நடத்தும் உக்ரேனிய படைகளின் நகர்வினை ரஷ்ய படைகள் ‘வடிவமைத்தன’. உக்ரேனிய படைகள் படிப்படியாக ஒரு ‘குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள்’ போகும் வகையில் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தின. அந்த ‘குறிப்பிட்ட நிலப்பரப்புதான்’ ரஷ்யாவின் killing zone.”
•இன்னொரு முக்கியமான விடயத்துடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
உக்ரேனின் counter-offensive இனை ரஷ்யா வெற்றிகரமாக முறியடித்தது. இதில் உக்ரேன் லட்சக்கணக்கான படையினரை இழந்தது. பெரும்பாலான கனரக ஆயுதங்களை இழந்தது. இன்னும் துல்லியமாக கூறுவதாயின் உக்ரைன் சந்திக்கப்போகும் தோல்விக்கான முதல் தொடக்கம் ரஷ்யாவின் இந்த முறியடிப்பு தாக்குதல்தான். இதனோடுதான் மேற்குலகம் கையை சுட்டுக்கொண்டதை உணர தொடங்கியது.
அதுபோல கடைசிவரை முகமாலை,பளை,கிளாலி பகுதிகளில் அமைத்திருந்த defense line களை இராணுவத்தால் உடைக்க முடியவில்லை.
2000 ஆம் ஆண்டு புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின்,இந்த கிளாலி-நாகர்கோவில்-முகமாலை எனும் நீண்ட முன்னரங்கு பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டது.
அன்றிலிருந்து 2009 ஜனவரி மாதம் வரை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இந்த பகுதிகள் இருந்தன.
இலங்கை இராணுவம் பூநகரியையும்,பரந்தனையும் கைப்பற்றிய பிறகு, புவியியல் ரீதியில் இவைகளை தக்கவைப்பது கடினம் என்பதால் தளபதி தீபனின் படையணிகளை தலைவர் பிபாகரன் பின்வாங்குமாறு பணித்தார்.
க. ஜெயகாந்