
இது ஒரு அந்நிய படையெடுப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போரின் வெற்றிவிழா அல்ல.
இந்த நாட்டிற்கு சொந்தமான சகோதர குடிமக்களின் சுதந்திரத்தை மறுத்து திணிக்கப்பட்ட போரின் வெற்றிவிழா. அரசியலமைப்பு பிழையால் ஏற்ப்பட்ட பேரவலத்தின் வெற்றிநாள்.
அதன் பலாபலன்களையே இந்த நாடு அனுபவித்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் அனுபவிக்கும். போரில் தமிழர்கள் தோற்கவுமில்லை. சிங்களவர்கள் வெல்லவுமில்லை. தோற்றது இலங்கை. இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. அரசியல் பிழைத்தமையால் உயிரிழந்த 30ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு அனுதாபங்கள்….