×

இவனே தலைவன்!

இவனே தலைவன்!

சங்கே முழங்கு! சங்கே முழங்கு! தம்பி பிறந்தநாள் சங்கே முழங்கு! கார்த்திகை மாதம் கடற்கரையோரம்! பூத்ததோர் பூவின் புகழை முழங்கு!

ஆயிரம் ஆண்டுகள் அசதியில் கிடந்தபின் ஈழமண் மீண்டும் எழுந்தநாள் முழங்கு! ‘தம்பி’ பிறந்த நாள் சங்கே முழங்கு!

இன்று கார்த்திகையில் வந்த இருபத்தியாறா? வீரக் கனலொன்று ஈழமண்ணில் கனன்றிட்ட நாளா?

தென்றலே – வருக! ஈழத் தேசியத்தலைவன் பேரை என்றுமே பாடிப்பாடி எழுந்து நீ மெல்ல வீசு இந்தியப் பெரும்படையும் இலங்கையின் படையும் சேர்ந்து வந்திட்ட போதும் அஞ்சி வளைந்திடாத் தலைவன் நாமம்”

சந்ததம் பாடு அந்தச் சரித்திரம் தன்னைப்பாடு! விந்தைகள் படைக்கும் எங்கள் வீரனைப் பரணிபாடு!

ஆயிரம் களங்கள் கண்ட அண்ணனைத் தமிழீழத்தின் பாயிரமாகப் போகும் பரணியின் தலைவன் தன்னை

ரவியபடைகள் வந்து என்னடா செய்யும்? காவியம் களத்தில் வெல்லும் காலங்கள் அவன்பேர் சொல்லும்!

வல்வெற்றித்துறையே! உன்னை வணங்கினோம்! தமிழர் வீரம் கல்வெட்டில் பொறித்தோர் தம்மை கருவிலே … சுமந்த மண்ணே!

சொல்லெட்டும் வரையும் பாடித் துதிக்கிறோம் வீரவேங்கை செல்லட்டும் என்றே கூட்டைத் திறந்திட்ட மண்ணே வாழி!

அஞ்சிடாநெஞ்சன்! யார்க்கும் அடங்கிடா வீரன்! இன்று வெஞ்சமர்க்களத்தில் நின்று வென்றிடும் தலைவன் எங்கள்

பிஞ்சுகள் புலியாய் மாறிப் போர்க்களம் போகச் செய்தோன்! செந்தமிழ் ஈழம் மீட்டு சிறப்புடன் வாழ்க! வாழ்க!!

– பேராசிரியர் சாலை இளந்திரையனார்.
– வீரவேங்கை 1990

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments