
புலியிருந்த குகையதனைப் புறநானுாற்றில் கண்டேன்
இன்று கரும்புலி வளர்ந்த கருவறையைக் களத்தினிலே கண்டேன்! வரும் படைகள் அஞ்சிடவே வரலாறு படைக்கும் கரும்புலிகள் உயிர்ப்பினிலே காலனுடல் நடுங்கும்!
கரிகாலப் பெருஞ்சோழன் கடல் கடந்தும் ஆண்டான்- இன்று கரிகாலன் கடல் கடந்து பகை வென்று வாழ்ந்தான்! வரும்நாளில் தமிழீழம் வரலாறு படைக்கும் வங்கக் கடலிலுமோர் கரும்புலிகள் களமொன்று பிறக்கும்!
பெரும்படைகள் பேதலித்துப் பின்வாங்கிச் செல்ல கரும்புலிகள் களமாடி கடல்தனை வெல்லும்! வரும்நாளில் வல்லரசு வாலறுந்து செல்லும் கரும்புலிகள் கல்லறைகள் காவியங்கள் சொல்லும்!
கடல் பெரிது வான் பெரிது யார் சொன்னது? கரும்புலிகள் தியாகத்தை என்னென்பது! கதிரவனும் ஒளியிழந்து கடுகளவாய் மாறும் கரும்புலிகள் ஒளியினிலே தமிழீழம் வாழும்!