
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் உத்தியோகபூர்வமாக போர் தொடங்கப்பட்ட நாள் 1987 அக்டோபர் 10.
ஒரு பக்கம் போர் இன்னொரு பக்கம் அதன் தொடர்ச்சியாக செக்மேட் எனும் பெயரில் தலைவர் பிரபாகரனை கைது செய்வதற்காக இந்தியாவின் சிறப்புப் பயிற்சி பெற்ற அணியொன்று தலைவரை தேடி அழிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி இருந்தார்கள்.
போரின் போது அகதியான மக்களோடு சேர்ந்து அண்ணி மதிவதனி அவர்களும் இரண்டு பிள்ளைகளும் நல்லூர் கந்தசாமி கோயிலில் தஞ்சம் அடைந்தார்கள்.
தன்னுடைய குடும்பம் மக்களோடு கலந்திருப்பது மக்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட தலைவர் மனைவியை தான் இருக்கும் ஆலம்பில் காட்டிற்கு வரவழைத்தார். பிள்ளைகளை தன்னுடைய தாய் தந்தையிடம் ஒப்படைத்தார்.
அலம்பில் காடு நோக்கிச் செல் தாக்குதல் அதிகமாக.. எந்த நேரத்தில் எது வேணுமென்றாலும் நடக்கலாம் எனும் சூழ்நிலையில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்பிய நாடான சுவீடனுக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்க வைத்தார். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டனர்.
அங்கிருக்கும் போது எடுத்த படமே இந்தப் படம்.
