
ஆனையிறவு பெரும் தளத்தை வெறும் 1200 போராளிகளோடு..
10000+ இராணுவத்தினர் உள்ள ஆனையிறவு பெரும் தளத்தை வெறும் 1200 போராளிகளோடு எதிரியின் கோட்டைக்குள்ளேயே கடல் மூலமாக தரையிறங்கி 32 நாள் கடும் சமரில் வெற்றி கொள்ளப்பட்ட தினம் இன்று
இச்சமரின் சிறப்புகள்:
1) அனைத்து படையணிகளில் இருந்தும் எல்லா மாவட்டங்களில் இருந்தும் போராளிகள் பங்கெடுத்தனர்
2) இம்மாதிரி ஒரு தரையிறக்கத்தை ராணுவமே செய்ய தயங்கும் அதை வெற்றிகரமாக தலைவர் செய்து முடித்தார்
3) 2ம் உலகப் போரில் நோர்மண்டி தரையிறக்கத்தை விட இது சிறப்பு வாய்ந்தது
4) ஏனென்றால் தரையிறக்கத்தின் தரை வழி இணைப்பு ஏற்படும் வரை உணவு வெடி பொருட்கள் மருந்துகள் கிடைப்பது சிரமம் இருந்த போதிலும் சிறப்பாக களமாடினர் புலிகள் 3 நாட்களின் பின்னரே பிரிகேடியர் தீபன் மூலமாக தரை வழி இணைப்பு ஏற்ப்பட்டது
5) ராணுவம் இச்சண்டையில் ஆளணி மோட்டார் ஷெல் ராங்கி விமானம் உலங்கு வானூர்தி மூலமாக சகல பக்கங்களில் இருந்தும் தாக்கிய போதும் ஒரு அடி நகரவில்லை புலிகள்
6) கடற்புலிகள் மாலை 7 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 10 மணிக்குள்ள 1200 போராளிகளையும் தம்மிடம் உள்ள குறைந்த வளங்கள் மற்றும் படகுகளுடன் தரையிறக்கியது இமாலய சாதனை
7) இராணுவத்தின் சகல தளபதிகளும் செய்வதறியாது பித்து பிடித்து பலாலி தளத்தில் அலைந்தனர்
8) இச்சமரில் விடுதலைப்புலிகளின் மகளீர்படையணிகளும் சிறப்பாகபோரிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
9) இச்சண்டையில் ராணுவத்தின் பல கவச வாகனங்கள் ராங்கிகள் உலங்கு வானூர்திகள் தாக்கி அழிக்கப்பட்டன
10) ராணுவத்தின் ஆட்டிலெறிகள் புலிகளால் முல்லைச் சமருக்கு பின் இச்சமரிலே கைப்பற்றப்பட்டது
11) இதில் பதிவேற்றிய இப்படம் தான் தலைவரின் அறையை அலங்கரித்தது
12) பல நூறு சிறப்பு எல்லை படையினர் இச்சமரில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது
13) பல கட்ட சண்டைக்கு பின் ஏப்ரல் 22 இத்தளம் முற்று முழுதாக புலிகளிடம் வீழ்ந்த நாள் அது இந்நாள்
தமதுகோட்டையை யாருமே நெருங்கமுடியாதென இறுமாப்புடன் இருந்த எதிரியின் கனவு சுக்குநூறாகியது!
இந்நாளில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் நினைவிருத்தி வீரவணக்கம் செலுத்துவோம்.
![]()