×

ஊர் நோக்கி – வற்றாப்பளை

ஈழ நாட்டிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்ணகித் தெய்வ வழிபாட்டில் முதன்மை பெற்ற ஊராக வற்றாப்பளை காணப்படுகிறது. வைகாசி மாதத்தில் திருவிழாக் கோலம் பெறும் வற்றாப்பளை கண்ணகித் தெய்வத்தால் புகழ் பெறும் ஊராகக் காணப்பட்டு வருகிறது.

சங்ககாலம் சங்கமருபிய காலத்து தொடர்புடைய சிலப்பதிகாரம் என்னும் இலக்கியத்தோடு தொடர்புபட்ட கண்ணகி, கண்ணகியோடு தொடர்புபட்ட வற்றாப்பளை என நீண்ட வரலாற்றை கொண்ட புண்ணிய பூமியாக விளங்கும் வற்றாப்பளை, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அதாவது போத்துகேய, ஒல்லாந்த, ஆங்கிலேயே ஆக்கிரமிப்போடு இலங்கை இந்திய படைகளாலும் இந்த வற்றாப்பளை ஊரும் கோவிலும் ஆக்கிரமிக்கப்பட்டு பல அதிசயங்களும் நடந்த ஊராக வற்றப்பளை காணப்படுபிறது.

தண்ணீர் ஊற்று முள்ளியவளை கிராமங்களை எல்லையாகக் கொண்ட வற்றாப்பளை, தென்னந்தோப்புகள், வயல்கள், சிறு தோட்டங்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டு வாழும் மக்கள் உள்ள வற்றாப்பளை, தமிழர் மரபியலோடு இன்னும் காணப்படுகிறது.

நாவலர் காலத்தில் யாழ்பாணத்தில் உள்ள கண்ணகி மற்றும் கிராமியத் தெய்வங்கள் குல தெய்வங்கள் ஆகம முறைப்படி மாற்றப்பட்டு பிராமணர்கள் பூசை செய்யம் ஆலயமாக மாறிய போது, கண்ணகி வழிபாடு செய்து வந்த தமிழ்மக்கள் வடக்கு கிழக்கில் அதிகம் தமது வழிபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வற்றாப்பளை கண்ணகியைத் தேடி வரத் தொடங்கினர். வருடா வருடம் வைகாசி மாதம் மக்கள் பெருந்திரலாக கூடி கண்ணகி வழிபாட்டை செய்வார்கள்.

இது போன்று தான் புளியம்பொக்கனை, புதூர் போன்ற கிராமியத் தெய்வ வழிபாட்டுக்கு நாட்டின் எப்பாகத்தில் இருந்தும் மக்கள் வந்து கூடி வழிபடக் காரணம். தமிழர் வாழ்வியல் குல தெய்வ நடுகல் மற்றும் கிராமியத் தெய்வ வழிபாட்டுடன் தொடர்புபட்டது. இத்தகைய பெருமைகளை இன்றும் பாதுகாக்கும் ஒரு இடமே வற்றாப்பளையாகும்.

ஈழ போரட்ட வரலாற்றில் பல வெற்றிகரமான வீரமிக்க வரலாற்றையும் ஈழத்தின் நீண்ட தியாகப் பாதையிலும் வற்றாப்பளை வற்றாமல் தன் பங்கிளப்பை செய்த ஊராகும்.

– வட்டக்கச்சி
– வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments