×

வீரபாண்டியனின் வெற்றித்தூண்

திருகோணமலை நகரில் வாழும் அன்பர்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் வீரபாண்டிய மன்னனால் நிறுவப்பட்ட வெற்றி துணைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்.

திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயிலில் காணப்படும் இந்த வெற்றித் தூண் ஜடவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1251 -1268) இளைய சகோதரனும் துணை அரசனாகிய வீரபாண்டியனால் நிறுவப்பட்டது.

இக்காலப்பகுதியில் ஆட்சி செய்த சாவகனான சந்திரபாணு மன்னனை திருகோணமலையில் இடம்பெற்ற போரின் போது வீரபாண்டிய மன்னன் வெற்றி கொண்டு அதன்பின் திருகோணமலையில் வெற்றி விழா நிகழ்த்திய பொழுது இந்த வெற்றித் தூண் நிறுவப்பட்டது என்று கருதப்படுகிறது.

பாண்டியப் படை வீரர்கள் தாம் அடைந்த வெற்றிக்கு நன்றிக் கடனாக முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்து, தானதர்மங்கள் புரிந்து இந்த வெற்றிச் சின்னத்தை நாட்டியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இக்காலப்பகுதியில் வில்லூன்றி கந்தசுவாமி ஆலயம் திருப்படைக் கோயிலாக காணப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. முருகப்பெருமானின் படைக்கலமாகிய வேலினை ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைத்து வணங்கும் கோயில்களை திருப்படைக் கோயில் என்று அழைப்பது வழக்கம்.

இந்த வெற்றி துணினை புராதன ஆலயத்தின் முக மண்டபத்தில் நாட்டினார்கள் என்பது கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. எனவே திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வரலாறு 750 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது

குறிப்பு    திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோயில் சாசனம் தொடர்பான மேலதிக விபரங்களை பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் இலங்கைத் தமிழ் சாசனங்கள் 2  நூலின் 343 வது பக்கத்தில் முழுமையாக படித்த அறியலாம்

நட்புடன் ஜீவன்.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments