×

அனைவருக்கும்  புகழ் வணக்கத்தையும் இரங்கலையும் பதிவு செய்கின்றோம்.

1987 ஆம் ஆண்டு 2ஆம் மாதம் 14 ஆம் திகதி

யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி முகாமைத் தாக்கி அழிக்கும் நோக்கத்தோடு 1987 ஆம் ஆண்டு 2ஆம் மாதம் 14 ஆம் திகதி விடுதலைப் புலிகளால் வெடி மருந்து நிரப்பித் தயார் செய்யப்பட்ட போராயுதமான ராணுவத்திற்கு குடிநீரைக் காவிச் செல்லும் பவுஸர் வண்டி பொறியியல் நடவடிக்கையில் ஏற்பட்ட தவறு ஒன்றினால் வெடித்துச் சிதறியது.

இந்த துன்பகரமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் பத்துப் பயிற்சிப் பாசறைகளை நடத்தி ஆயிரம் விடுதலைப்புலிகளை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு உறுதி கொடுத்த அற்புதன் அல்லது பொன்னம்மான் என்ற யோகரத்தினம் குகன்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாம் பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்று யாழ் மாவட்டத்தின் தென்மராட்ச்சி பிராந்தியத்தின் முதன்மைத் தளபதியான கேடில்ஸ் என்ற மகாலிங்கம் திலீபன்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றிய வாசு என்ற உருத்திராபதி சுதாகர்,

அத்தோடு சித்தார்த்தன் என்ற வைத்தியலிங்கம் வசீகரன், மேலும் பரன் என்ற கிருட்ணர் அருச்சுனன், யோகேஸ் என்ற சுந்தரம் தனபாலசிங்கம், தேவன் என்ற தம்பிப்பிள்ளை வசந்தகுமார், குமணன் என்ற கந்தையா மோகனலிங்கம், அக்பர் என்ற அருளம்பலம் யோகநாதன், கவர் என்ற கதிர்காமு நகுலேஸ்வரன், ஆகிய பத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகளின் வீரமரணத்திற்கு, எமது வீரவணக்கத்தைப் பதிவு செய்கின்றோம்.

பண்டிதரின் மரணத்தின் பின் யாழ்ப்பாண மண்ணை தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண தளக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாக்கிய கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாக களத்தில் நின்ற காலத்தில் தென்மராட்சி பொறுப்பாளராக இருந்த கேடில்ஸ் அவர்களது போரளிகள் நாவற்குழி படை முகாமைப் பற்றித் திரட்டிய வேவுத்தகவல்களின் அடிப்படையில் இந்தியாவில் வெற்றிகரமாக பயிற்சிப் பாசறைகளை நிறைவேற்றி முடித்துக் கொண்டு ஈழம் திரும்பி இருந்த பொன்னம்மானின் ஒருங்கிணைப்பில், நாவற்குழி படை முகாமை தாக்கி அழிக்கும் திட்டம் மிகவும் ரகசியமாகத் தீட்டப்பட்டது.

தகவல்களின் அடிப்படையில் நாவற்குழி இராணுவ முகாமுக்கு நாவற்குழி முகாமுக்கு அருகாமையில் உள்ள அன்ட்ரீஸ் நிறுவனம் (Andreisz Company) இலங்கை இராணுவத்திற்கு பொதுமகன் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தது. அந்த வகையில் அந்த முகாமிற்கு முன்று நாளைக்கு ஒருமுறை அந்தப் பொதுமகன் முகாமிற்கு பவுசர் மூலம் தண்ணீர் எடுத்து கொண்டு செல்வது வழக்கமானதாகும். அந்த பவுசரை ஓட்டி சென்று அந்த முகாமில் உள்ள ராணுவத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக அன்ட்ரீஸ் நிறுவனத்தால் (Andreisz Company) அந்த பொதுமகனுக்கு சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. இதனை விடுதலைப் புலிகள் அறிந்து இருந்தாலும் அந்த நடவடிக்கைக்கு எந்த இடையூறும் கொடுக்காமல் கண்டும் காணாமல் விட்டு இருந்தார்கள்.

எனவே அதனை இந்த தாக்குதலுக்கு சாதகமாக்கி அந்த பவுசர் வண்டியைப் போல ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. அதற்கு வழமையாக செல்லும் பவுசரை போல இன்னும் ஒரு பவுசர் உருவாக்கப்பட்டு அந்த பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ்ப் பகுதியில் வெடிமருந்து நிரப்பியும் மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் இருக்குமாறு மூத்த தளபதி பொன்னம்மானின் மேற்பார்வையில், வாசு, கேடில்ஸ் மற்றும் சித்தார்த்தனின் துணையுடன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இல்லாத சாதாரண பொதுமகனும் பொன்னம்மானின் உறவினருமான, பொறியியளாலரான சிவநேந்திரன் என்ற ரஞ்சன் அவர்களின் உதவியுடன் அந்த பவுசர் வண்டி தயாரிக்கப்பட்டது.

அவ்வாறு தயாரிக்கபட்ட இந்த பவுசர் வாகனத்தை ஓட்டி செல்ல நவற்குழி முகாமிற்கு வழமையாக ஒட்டி செல்லும் அதே வாகனச்சாரதியே தெரிவு செய்யப்பட்டு இருந்தார் என்பதோடு அந்த வாகனச்சாரதி தப்பிக்கும் வகையிலேயே தாக்குதல் திட்டமும் விடுதலைப் புலிகளால் தீட்டப்பட்டு இந்தத் தாக்குதலைப்பற்றி அவரிடம் புலிகள் தெரிவித்தபோது “எதுவும் பிசகாகினால் என்னைப்பற்றி யோசிக்காதீர்கள் வெடிக்க வையுங்கள்” என அவர் புலிகளிடம் தெரிவித்திருந்தார் என்பது சாதாரண தமிழ் பொதுமக்கள் விடுதலைப் போராட்டத்தை எந்தளவிற்கு நேசித்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அந்த பவுசரை தாக்குதலுக்கு கொண்டு செல்ல தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த போது நடைபெற்ற இந்த வெடி விபத்தில் பொறியியளாலரான சிவநேந்திரன் என்ற ரஞ்சன் மற்றும் அந்த பவுசர் ஓட்டி செல்ல இருந்த சாரதி உட்பட 10 மாவீரர்கள் வீரச்சாவடைந்தார்கள் .

அனைவருக்கும்  புகழ் வணக்கத்தையும் இரங்கலையும் பதிவு செய்கின்றோம்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments