×

வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர்

வீரமும் அரச தந்திரமும் கொண்ட விருப்பாட்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கிளர்ச்சி செய்தார். சிவகங்கை பாளையக்கார ரான முத்துவடுகநாதர் ஆர்க்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு, இராணி வேலுநாச்சியார் தம் மகளுடன் தம்பி விருப்பாட்சி வந்தபோது தேவையான உதவியும் பாதுகாப்பும் அளித்தார்.

1783 -இல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். ‘திண்டுக்கல் கூட்டிணைவு ‘என்ற வலுவான பாளையக்காரர் கூட்டமைப்பை மணப்பாறை, தெல்லி, மங்கலம் தேவதானப்பட்டி, கன்னிவாடி, பெரியபட்டி, தொண்டாமுத்ததூர், தேங்காய்வாடி, வேடம்பட்டி, தாராபுரம், காங்கேயம், சங்ககிரி மற்றும் கரூர் பாளையக்காரர்களை இணைத்து உருவாக்கினார்.

சீரங்கப்பட்டினத்துக்குத் தூது அனுப்பி திப்பு கல்தானின் நட்பை பெற்றார். 1799.-ஆம் ஆண்டு திப்புகல்தானுக்கு ஆதரவாக, ஆங்கிலேயரின் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றினார்.

தென்னிந்திய அளவிலான தீபகற்பக் கூட்டமைப்பு ‘ உருவானபோது கோபால நாயக்கரின் தலைமையகமான விருப்பாட்சி ஆலோசனை முகமாகச் செய்யப்பட்டது.

1800 சூன் மாதம் கோபல நாயக்கரின் கூட்டமைப்பு கோயம்புத்தூரைக் கைப்பற்றத் திட்டமிட்டது. இதை முன்னமே அறிந்து கொண்ட ஆங்கிலேயர் இத்திட்டத்தை முறியடித்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

1801 மார்ச் 17 அன்று லெப்டினன்ட் கர்னல் இன்னிஸ் திண்டுக்கல் நகரைத் தாக்கினர். ஆகவே ஆனைமடுக் காடுகளுக்குச் சென்று அங்கிருந்து கோபால நாயக்கர் தாக்குதலை தொடர்ந்தார். 1801 மே 4 ம் தேதி, கோபாலநாயக்காரும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டர். 1801 நவம்பர் மாதம் 73 வயதான கோபால நாயக்கரும பிற தலைவர்களும் கோபால சமூத்திரம் குளக்கரையில் தூக்கிலிடப்பட்டனர்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments