×

ஊர் நோக்கி – கந்தரோடை

ஈழத்தின் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரிவில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஊரே கந்தரோடை.
இவ்வூரின் வடக்கு எல்லையில்  மாசியப்பிட்டி, மல்லாகம்  ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சுன்னாகம், உடுவில் ஆகிய ஊர்களும், தெற்கில்  சங்குவேலியும் மேற்கில் சண்டிலிப்பாயும்  உள்ளன. சுன்னாகத்தில் இருந்து மாசியப்பிட்டிக்குச் செல்லும் வீதியில், சுன்னாகத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

தமிழர் நாகரீக வரலாற்று ஆய்வில் மிக முக்கியமான இடமாக உள்ளது கந்தரோடை. தமிழகத்தின் ஆதிச்ச நல்லூர் கீழடி போன்ற பிரதேசங்களில் கிடைக்கப்பெற்ற ஆய்வு முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு முடிவுகள் கந்தரோடையில் சுமார் 32 சதுர கிலோமீற்றர் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலோட்டமான ஆராட்சியில் தொன்மையான சிவப்பு, கறுப்பு மட்பாண்டங்கள், எலும்புகள், ஆபரணங்கள், தமிழ எழுத்துக்கள்  பொறிக்கப்பட்ட ஆபரணங்கள், மணி வகைகள், சிற்பங்கள்,  எலும்புகள், கட்டட சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தரோடை தற்பொது ஒரு சிறிய பிரதேசமாக இருந்தாலும் கிமு.700 முன்னரே மக்கள் வாழ்ந்த இடமாகவும், மிகப்பிரசித்திபெற்ற நாகரீக வணிக நகரமாகவும் இருந்திருக்கிறது. பொளத்த சமய எழுச்சி மற்றும் சைவ சமய எழுச்சிகளோடு தொடர்புபட்டுள்ள கந்தரோடை தமிழ் பிரதேசங்களை ஆண்ட மூவேந்தர்களுடனும் தொடர்பும் சீன அரசுடன் நெருங்கிய வணிகத் தொடர்பையும் கொண்டுள்ளது.

எண்ணற்ற தொன்மையான தமிழர் வாழ்வியலை தன்னுள் அடக்கிக்கொண்டு இனவாத அடக்குமுறையில் வெளிப்படாமல் இராணுவ பிரசன்னத்தோடு இருக்கிறது கந்தரோடை. தமிழர்வாழ்வியல் ஆய்வில் கீழடி ஆதிச்ச நல்லூர் போல ஆய்வு செய்யப்பட வேண்டிய பெரு நிலப்பகுதி கந்தரோடை.

பல ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வுகள் நடத்தியுள்ளார்கள். பல அரிய விடயங்கள் தொன்மைகள் வெளிவந்துள்ள போதும் தமிழர் வாழ்வியல் உண்மைகள் அதிகார வர்க்கத்தின் மற்றும் இனவாதத்தின் கொடும்பிடியில் இன்னும் மறைக்கப்பட்டுள்ளது.

ஈழப் போரட்டத்தில் பல இடம்பெயர்வுகளையும் பல தியாகங்களையும் கந்தரோடை சந்தித்துள்ளது. கல்வித்துறையில் பல கல்வியலாளர்களை தமிழ் மண்ணுக்குத் தந்த பெருமை கந்தரோடைக்கு உண்டு.
தியாகத்தோடும் தமிழர் தொன்மையோடும் தன்னை அறிய நினைக்கும் எவருக்கும் எண்ணற்ற தகவலோடும் தனக்குள் பலவற்றை புதைத்து அடக்கு முறையிலும் தலை நிமிர்ந்து நிற்கிறது கந்தரோடை.

கந்தரோடையில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலைகள்:
– கந்தரோதயா கல்லூரி
– தமிழ் கந்தையா வித்தியாலயம்

வட்டக்கச்சி
வினோத்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments