×

(05.12.1938) பங்கேற்றுச் சிறை ஏகினார் நடராசன்

சென்னை இந்தி தியாலசிகல் பள்ளியின் முன் அன்றாடம் நடந்து வந்த ‘இந்தி ஆதிக்க எதிர்ப்பு’ மறியல் அறப்போரில் கி்.பி. 1938 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 -ஆம் நாள் (05.12.1938) பங்கேற்றுச் சிறை ஏகினார் நடராசன். வெஞ்சிறைக் கொடுமையால் உடல் நலம் குன்றிய அவர் 30.12.1938 அன்று சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மன்னிப்புக் கடிதம் எழுதித்தந்தால் விடுதலை செய்வதாக கூறிய அன்றைய அரசிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிடாத நடராசன் 15-1-1939 ஆம் நாள் தனது 20 ஆம் வயதில் உயிரிழந்தார்.

குடும்பத்தின் ஒரே மகனும் திருமணமும் ஆகாத நடராசன் மொழிப் போரின் முதல் களப்பலியானார்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments